மௌனம் கவிதை - Mounam Kavithai

உலகோர்க் கெல்லாம்
பொது மொழியாய்
உயர்ந்த ஞாநியரின் 
திரு வழியாய்
சந்தோஷ உணர்வின்
வெளிப்பாடாய்
சந்தர்பங்களில்
சங்கடங்களால்
பேசிடும் வார்த்தையே மௌனம்!
நசுக்கப்பட்ட இனத்தின் மௌனம் 
காட்டில் மறைத்த கனலே என்பேன்!
இரவின் மௌனம் 
விடியலின் சுகந்தம்
பூக்கள் பேசிடும் 
புகழ் பெற்ற மொழி
சட்டென கலைந்தது
அலைபேசி அழைப்பால்!


Comments

Archive

Contact Form

Send